உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை திறப்பு

கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை திறப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் நடந்த விழாவிற்கு, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப் பதிவாளர்கள் சுகுந்தலா, சுரேஷ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென தனியாக அலுவலகம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலகத்தை, இணைப் பதிவாளர் முருகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். மேலாண்மை இயக்குனர் செந்தில், முதுநிலை ஆய்வாளர் மணிகண்டன், பொது மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ