உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா

அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் பந்தல்கால் நடும் விழா

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை பந்தல்கால் முகூர்த்த விழா நடந்தது.அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் முடிந்து, 10:25 மணிக்கு முகூர்த்த கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், கோவில் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ