உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் பகுதியில் துணை ராணுவம் அணிவகுப்பு

அரகண்டநல்லுார் பகுதியில் துணை ராணுவம் அணிவகுப்பு

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் காவல் சரகத்திற்குட்பட்ட பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு நடந்தது. விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளாக அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி, பில்ராம்பட்டு, ஆற்காடு உள்ளிட்ட கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் மக்கள் அச்சமின்றி ஓட்டுபோடும் வகையிலும், பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் துணை ராணுவப் படையின் சப் இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தர்மா மற்றும் அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது தலைமையில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ