மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
7 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
7 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
10 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரே சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளும், பார்வையாளர்களும் நிற்பதற்கு அவதியடைகின்றனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சிறுவங்கூர் கிராமத்தில் இயங்கி வருகிறது. தினசரி இந்த மருத்துவமனைக்கு மாவட்டம் முழுதுமிருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.மருத்துவமனை எதிரே சாலையோரங்களில் தற்காலிக கடைக்காரர்கள் பலரும் கூல்டிரிங்க்ஸ், டீக்கடை என பல்வேறு கடைகளை வைத்துள்ளனர். மேலும் அந்த சாலையில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் அணிவகுப்பும் அதிகரித்துள்ளது.இதனால், அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க இடமின்றி அவதிக்குள்ளாகின்றனர். இதனால் உடல்நலம் குன்றி நோயாளிகள் சாலையிலேயே அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி விட்டு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7 hour(s) ago
7 hour(s) ago
10 hour(s) ago