உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேமாளூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் கோரி குடியிருப்பு மக்கள் மனு

மேமாளூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் கோரி குடியிருப்பு மக்கள் மனு

கள்ளக்குறிச்சி: மேமாளூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் வழங்ககோரி குடியிருப்பு மக்கள் தங்களது பிள்ளைகளுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் கிராமத்தில் ஒரு பகுதியில் 130 வீடுகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். மூன்று தலைமுறையாக அப்பகுதியில் வசித்து வரும் நிலையில் மின்சார வரி, வீட்டு வரியை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வருகிறோம். இந்நிலையில், நாங்கள் வசிக்கும் பகுதி நீர்நிலை பிடிப்பில் உள்ளதாக அறிவித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக 130 வீடுகளை அகற்ற அதிகாரிகள் கடந்த 8ம் தேதி மின் இணைப்புகளை துண்டித்தனர். இங்கு வசிப்பவர்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது உடனடியாக வீடுகளை காலி செய்யும் பட்சத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி நலன் பாதிக்கப்படும். எனவே வாடகை வீடு, மாற்று இருப்பிடம் ஏற்படுத்தி கொள்வதற்கு தங்களுக்கு குறைந்தது ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இந்த ஒரு மாத காலத்திற்கு பின்பு ஆக்கிரமிப்புகளை நாங்களே அகற்றிக் கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை