உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குடிநீர் பிரச்னையை கண்டித்து உளுந்துார்பேட்டை அருகே மறியல்

குடிநீர் பிரச்னையை கண்டித்து உளுந்துார்பேட்டை அருகே மறியல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை அடுத்த கோட்டையம்பாளையம் ஊராட்சி 6வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். தினசரி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை 8:00 மணியளவில் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருநாவலுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 8:50 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி