உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொதுமக்கள் மனுக்களுக்கு விரைந்து தீர்வு

பொதுமக்கள் மனுக்களுக்கு விரைந்து தீர்வு

கள்ளக்குறிச்சி : பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் தீர்வு குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் துறைவாரியாக பெறப்பட்ட மனுக்கள், தீர்வு மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள், தள்ளுபடி மற்றும் அதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்டத்தில், கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், 'பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பெரும்பான்மையான மனுக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அவ்வாறு தீர்வு காணும்பட்சத்தில், பொதுமக்கள் ஒரே கோரிக்கைக்கு பல இடங்களில் மீண்டும், மீண்டும் மனுக்கள் கொடுப்பது தவிர்க்கப்படும். குறைதீர் முகாம்கள் நடக்கும் நாட்களில் ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட பணிகள், தினசரி ஊதியம், கிடைக்கும் வேலைகளை தவிர்த்து நம்பிக்கையுடன் வந்து மனுக்களை வழங்குகின்றனர். எனவே, அரசு அலுவலர்கள் அதனை உணர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்' என்றார்.கூட்டத்தல் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் குப்புசாமி உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை