உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர்கள் செல்வராஜ், அழகேசன், ஆப்ரகாம், சண்முகம், சுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர்கள் வேலாயுதம், அருணாசலம், சக்கரவர்த்தி, ராஜசேகர், அன்பழகன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முருகன் வரவேற்றார். மண்டல துணை செயலாளர்கள் பலராமன், துளசிங்கம், மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், டிசம்பர் 2022ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 104 மாத பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.ஒப்பந்த முறையில் பணி நியமனத்தை கைவிட்டு வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ