உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சியில் போராட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சியில் போராட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி விளக்க உரையாற்றினார். நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளின் அட்டகாசத்தை தவிர்க்க கேரள மாநிலத்தில் வாய்வெடி மருந்து வைக்கப்படுகிறது.அதுபோல தமிழகத்திலும் ஆணை பிறப்பிக்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டிய நிலங்களில் உள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க சிறப்பு கவனமும், வேளாண்மைதுறையுடன், வருவாய் மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும்.வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை, முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும், புதிய யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், துணை செயலாளர் ஏழுமலை, துணைத்தலைவர்கள் தெய்வீகன், நாகராஜன், அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை