உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிவாரண உதவி பா.ஜ., வழங்கல்...

நிவாரண உதவி பா.ஜ., வழங்கல்...

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு, பா.ஜ., சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர்.இதையடுத்து உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ., சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இதையடுத்து, பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத், கருணாபுரம் பகுதியில் நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார். முதல் கட்டமாக 29 பேருக்கு நிவாரண உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது.பா.ஜ., மாநிலச் செயலாளர் சூர்யா, மாவட்ட தலைவர் அருள், மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் ஹரி, கிருஷ்ணமூர்த்தி, ஓ.பி.சி., அணி மாநில செயலாளர் செல்வநாயகம், பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கர சுப்ரமணி, சர்தார்சிங் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 23, 2024 12:37

ஆகா மொத்தத்தில் பாஜகவும் கள்ளச்சாராய விஷயத்தில் திமுகவை பின்பற்றுகிறது. திருமதி பிரேமலதாவே உண்மையான தைரியமான வெளிப்படையான அரசியல்வாதி


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை