உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூளை மூடக்கு வாதத்தால் பாதித்த 5 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கல்

மூளை மூடக்கு வாதத்தால் பாதித்த 5 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்திலி கிராமத்தில் மூளை மூடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி மகன் திருமலை, 20; சேகர் மகன் தரனீஷ், 7; தேவபாண்டலம் பன்னீர்செல்வம் மகன் தட்சித், 7; மேல்சிறுவளுர் ஆறுமுகம் மகன் வெங்கட்ராமன், 6; பொரசப்பட்டு சத்யராஜ் மகன் அஸ்வின், 7; ஆகிய 5 பேரும் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களது நிலை அறிந்த கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி, நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலம் நேரில் சென்று இந்திலி மற்றும் சங்கராபுரம் பகுதியில் தனித்தனியாக ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து திருமலைக்கு மாற்றுத்திறனாளிக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 8,500 ரூபாய் மதிப்புள்ள சக்கர நாற்காலி மற்றும் சிறுவர்கள் தரனீஷ், தட்சித், வெங்கட்ராமன், அஸ்வின் ஆகியோர்களுக்கு தலா 9,050 ரூபாய் மதிப்பில், சிறார்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கினார்.முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஹரிதாஸ் உள்ளிட்ட களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை