உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சர்வீஸ் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை: தென்கீரனுார் மேம்பாலம் பகுதியில் பாதிப்பு

சர்வீஸ் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை: தென்கீரனுார் மேம்பாலம் பகுதியில் பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை மேம்பாலம் பகுதியில் 'சர்வீஸ் சாலை' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உளுந்துார்பேட்டை - சேலம் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு முதல் போக்குவரத்து உள்ளது. உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய எட்டு இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.துவக்கத்தில் போக்குவரத்து குறைவை காரணம் காட்டி புறவழிச் சாலைகள் அனைத்தும் இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உளுந்துார்பேட்டை-சேலம் சாலையில் வாகனங்களின் போக்குவரத்து மிகுதியால், இருவழிச்சாலையான புறவழிச் சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இருவழிச்சாலை உள்ள புறவழிச் சாலைகளில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், அதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக படிப்படியாக அனைத்து புறவழிச்சாலைகளும், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.இதில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தென்கீரனுார் மற்றும் ஏமப்பேர் சாலையில் இரண்டு மேம்பாலங்கள் உள்ளது.இவை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இரு மேம்பாலம் குறுக்கே பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது. இதில் புறவழிச்சாலை நடுவே அமைந்துள்ள தென்கீரனுார் மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலைபோல் உள்ள மண்சாலை வழியாக பள்ளி வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பைபாஸ் சாலையை கடந்து சென்றது. சாலையோரம் உள்ள மண்சாலை வழியாக அதிகளவிலான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகிறது.மழை காலங்களில் மண்சாலை சேரும் சகதியுமாக மாறிவிடுவதால், அத்தருணத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், தென்கீரனுார் மேம்பாலம் பகுதியில் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை