| ADDED : ஆக 20, 2024 05:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமை தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரத்துறை சார்பான கோரிக்கை மற்றும் புகார்கள் என மொத்தம் 671 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக சின்னசேலம் வட்டத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை பெறுவதற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.