| ADDED : ஆக 13, 2024 09:27 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கம், சங்கை தமிழ் சங்கம், தமிழ் வழி கல்வி இயக்கம் ஆகியன சார்பில், பொதுக் கூட்டம் நடந்தது. சங்கராபுரம் கடைவீதியில் நடந்த கூட்டத்திற்கு சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கினார்.தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் ஆண்டப்பன் வரவேற்றார். மருந்து வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, உலக தமிழ் கவிஞர் பேரவை மாவட்ட செயலாளர் சாந்தகுமார், தலைமை ஆசிரியர் ஆறுமுகம், நெடுமானுார் பாரதியார் தமிழ்ச் சங்க தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர்.தமிழும் மருத்துவமும் என்ற தலைப்பில் டாக்டர் நெடுஞ்செழியன், கல்வி உரிமை மாநிலத்திற்கே என்ற தலைப்பில் சிலம்பூர் கிழான், தமிழில் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் ஆசிரியர் லட்சுமிபதி, ஆட்சி மொழி தமிழே என்ற தலைப்பில் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேசினர்.தமிழ் வழிக் கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்பா தமிழர் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் கல்லை தமிழ் சங்க செயலாளர் மகேந்திரன், பூட்டை பாண்டியன், சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், ஆசிரியர் தெய்வநாயகம், பழனியாபிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர். சங்கை தமிழ் சங்க செயலாளர் சாதிக்பாஷா நன்றி கூறினார்.