உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா

பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6:30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் தாயார் மற்றும் ராமானுஜர் ஆச்சாரியார் சிறப்பு அலங்காரத்தில், உள்பிரகாரம் வலம் வந்து, மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை