உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல்; பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல்; பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

கள்ளக்குறிச்சி: ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். கள்ளக்குறிச்சி குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலக செய்திகுறிப்பு; தமிழ்நாடு அரசு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப் பதிந்தும், வாகனங்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் வெளி மாநிலங்களில் கள்ளச்சந்தையில் ரேஷன் அரசி வாங்கி விற்பனை செய்யும் வெளிமாநில நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ