மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
13 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
13 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி - துருகம் சாலையில் கால்வாயிலிருந்து கழிவு நீருடன் மழை நீர் கலந்து சாலைகள், வயல்வெளிகளில் வெளியேறியதால் கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.குடியிருப்பு, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரை முறையாக வெளியேற்றும் வகையில் போதிய கட்டமைப்பு வசதியின்றி உள்ளது. தியாகதுருகம் சாலையோரம் உள்ள கால்வாய் வழியாக செல்லும் கழிவு நீர் கோமுகி ஆற்றில் கலக்கிறது. அதேபோல் வ.உ.சி., நகர், ராஜா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கேசவலு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சித்தேரியில் தேங்குகிறது. அண்ணா நகர் உள்ளிட்ட சுற்று வட்டார குடியிருப்புகளின் கழிவு நீர் தென்கீரனுார் ஏரியில் சென்று தேங்குகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயில், அதிகளவில் மண் குவியல்கள் துார்ந்தது. இதனால் மழைக் காலங்களில் சாலைகள், வயல்வெளி மற்றும் குடியிருப்புகளுக்கு இடையே கழிவு நீர் வழிந்தோடும் தேங்கும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.தியாகதுருகம் சாலையோர கால்வாயில் பிளாஸ்டிகள் கழிவுகள் அதிகளவில் அடைப்பட்டு இருந்ததால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து ஆங்காங்கே குளம் போல் தேங்கியது. இதனையடுத்து நகராட்சி மூலம் தற்காலிகமாக கழிவு நீர் கால்வாயையொட்டி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
15 hour(s) ago