உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வு பெற்ற ஆசிரியர் பஸ் மோதி படுகாயம்

ஓய்வு பெற்ற ஆசிரியர் பஸ் மோதி படுகாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி கமலா,74; ஓய்வு பெற்ற ஆசிரியை.இவர் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் தனது கணவர் மற்றும் மகளுடன் ரோடுமாமந்துாரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார். பின்னர் பஸ் நிலையத்தில் இறங்கி பஸ்சின் முன்புறம் கடந்தபோது, திடீரென பஸ் இயக்கியதில் அவரது கால் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த கமலாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தனியார் பஸ் டிரைவர் சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் பரமசிவம்,30; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ