உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

திருக்கோவிலுார், : ரோட்டரி கிளப் திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டியின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.சாசன தலைவர் வாசன் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் ராமலிங்கம், வின்சென்ட் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்வு ஆளுநர் சிவசுந்தரம் தலைமை தாங்கி புதிய தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோதம்சாந்த், பொருளாளர் சவுந்தர்ராஜன் மற்றும் உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து 10 பேருக்கு புதிய தையல் இயந்திரங்கள், ஆலுார் அரசு பள்ளிக்கு கல்வி சேவைக்காக 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 'எல்.இ.டி.டிவி' பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடர்வதற்கான ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என சேவை திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கடேசன், தேவசேனாதிபதி, குமாரபாளையம் ரோட்டரி கிளப் உறுப்பினர் ரவி, சந்திரசேகர், உளுந்துார்பேட்டை திலீப், சங்கராபுரம் ராம முத்துகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். முத்துக்குமாரசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை