உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்பனை; தந்தை, மகன் கைது

சாராயம் விற்பனை; தந்தை, மகன் கைது

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளச்சாராயம் விற்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்து, தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாதவச்சேரி ஆற்று ஓடை அருகே, சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை, 59; மற்றும் அவரது மகன் விஜயகுமார், 24; புதுப்பாலப்பட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரிந்தது.போலீசாரை பார்த்ததும் மணிகண்டன் ஓடினார். இதையடுத்து சாராயம் விற்ற சின்னதுரை, விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மணிகண்டன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை