உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் ரோட்டரி, இன்னர்வீல் கிளப் சார்பில் ஐம்பெரும் விழா

சங்கராபுரம் ரோட்டரி, இன்னர்வீல் கிளப் சார்பில் ஐம்பெரும் விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி,இன்னர் வீல் கிளப் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி கிளப்,இன்னர் வீல் கிளப் சார்பில் அரசம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கல், வளைகாப்பு நிகழ்ச்சி, அன்னபூர்ணா தினம் மற்றும் மரகன்று நடு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.ரோட்டரி தலைவர் அசோக்குமார், இன்னர்வீல் கிளப் தலைவி சுபாஷிணி ரமேஸ் தலைமை தாங்கினர்.செயலாளர் சங்கர், உஷாதேவி வரவேற்றனர். ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், ஹெனார்தனன், வெங்கடேசன், முன்னாள் தலைவர்கள் சுதாகரன், நடராஜன், ஆறுமுகம், செளந்தர், செந்தில், மூர்த்தி முன்னிலை வகித்தனர்.டாக்டர்கள் முத்துக்குமார், ரோகிணி ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர்கள் கலாவதி, தீபாசுகுமார், அகல்யா ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, மனவளகலை மன்ற பேராசிரியை நளினாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சுமார் 150 கர்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி ஊட்டச்சத்து பெட்டகம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.மஞ்சுளா கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை