உள்ளூர் செய்திகள்

அறிவியல் மன்ற விழா

கள்ளக்குறிச்சி: ள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் சமூக அறிவியல் மற்றும் அறிவியல் மன்ற விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை தாங்கினார். இடைநிலை தலைமை ஆசிரியை லாவண்யா முன்னிலை வகித்தார். ஆசிரியை தேவிமயில் வரவேற்றார்.கூட்டத்தில் பள்ளி அளவிலான சமூக அறிவியல் மற்றும் அறிவியல் மன்றம் சார்பில் வினாடி வினா போட்டிகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து பள்ளி மாணவிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.ஜெயசித்ரா, முத்துக்கிருஷ்ணன், அன்பழகன் உள்ளிட்ட அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ