உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையிலான வருவாய் அலுவலர்கள் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஆலத்துார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஓ., லுார்துசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் லாரி டிரைவர் மோ.வன்னஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஏழுமலை, 30; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை