உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் மாஜி அமைச்சர் சூசகம்

ரிஷிவந்தியம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் மாஜி அமைச்சர் சூசகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் மோகன் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறவில்லையெனில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதால், வசந்தம் கார்த்திகேயன் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அமைச்சர் பொன்முடியின் வழக்கும் நிலுவையில் இருப்பதால், திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும்' என்றார்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,கள் அழகுவேல்பாபு, பிரபு, மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், எஸ்.டி.பி.ஐ.,மாவட்ட தலைவர் முகமது ரபீக், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன், சிறுபான்மை பிரிவு ஜான்பாஷா, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ரங்கன் பங்கேற்றனர். நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி