உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மறியல் போராட்டம்: 95 ஆசிரியர்கள் கைது

மறியல் போராட்டம்: 95 ஆசிரியர்கள் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 'டிட்டோ - ஜாக்'கைச் சேர்ந்த 95 பேரை போலீசார் கைது செய்தனர்.தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரியை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை கலந்தாய்வு பொது மாறுதல்களை நிறுத்தி வைக்க வேண்டும். பொது கலந்தாய்வு அட்டவணையை மாற்றி, ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, 'டிட்டோ - ஜாக்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பல்வேறு கூட்டணிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், மனோகரன், ேஷக் ஜாகீர் உசேன், செல்வராசு, எழிலரசன் முன்னிலை வகித்தனர்.ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் லட்சுமிபதி, துணைத் தலைவர் ரஹீம், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, அனைவரும் நான்கு முனை சந்திப்பு பகுதியில் காலை 10:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 20 ஆசிரியைகள் உட்பட 95 ஆசிரியர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி