உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோட்டமருதுாரில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள் திடீர் மறியல்

கோட்டமருதுாரில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள் திடீர் மறியல்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதுார் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சிலருக்கு வருகை பதிவேட்டில் வருகையை பதிவு செய்யாததால் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.முகையூர் ஒன்றியம், மணம்பூண்டி அடுத்த கோட்டமருதுார் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 5 பேர் அவசர பணியின் காரணமாக அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.சம்பவம் இடத்திலிருந்த பணித்தள பொறுப்பாளர் அவர்களுக்கு வருகைப் பதிவில் ஆப்செண்ட் போடுவதாக கூறியதால் பணியில் ஈடுபட்டிருந்த 40 பெண்கள், 10 ஆண்கள் உள்ளிட்ட 50க் கும் மேற்பட்டோர் கோட்டமருதுார் பஸ் ஸ்டாப் அருகே மதியம் 2:40 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மேற்பார்வையாளர் செந்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 30 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ