| ADDED : ஜூலை 07, 2024 04:27 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்ப்புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்ட மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் தமிழ்ப்புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்ட மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 -12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்பட உள்ளது.எனவே, மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம், உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, இத்திட்டத்திற்கு தகுதியுடைய நபர்களை தேர்வு செய்யும் முறை, வங்கி கணக்கு விபரங்களை சேகரித்தல், வங்கி கணக்கு இல்லாத மாணவர்களின் நலனுக்காக புதிய வங்கி கணக்கு துவங்கும் முகாமினை கல்லுாரிகளில் நடத்துதல் உட்பட பல்வேறு கல்லுாரி முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பேசினார். கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.