மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
13 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
13 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
16 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
16 hour(s) ago
புதுச்சேரி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதித்த பெரியசாமி, மகேஷ் உட்பட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஏழு பேர் சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ஜிப்மரில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால், சிகிச்சைக்கான மருந்துகள் ஜிப்மரில் இல்லை. சிகிச்சைக்கு அவசியமான சில மருந்துகளை வெளி மருந்தகங்களில் வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த மருந்துகள் வாங்கி தர அவர்களின் உறவினர்கள் பணம் இல்லை என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், 'சிகிச்சைக்கு ஒவ்வொரு வேளைக்கும் 600 -- 1,200 ரூபாய்க்கு மருந்து மாத்திரைகள் வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். எங்களிடம் பணம் இல்லை' என, மருந்து சீட்டுகளை காண்பித்து அழுகின்றனர். தினமும் கட்டட வேலைக்கு சென்று, சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் எங்களிடம் வெளியில் மருந்து வாங்கி வருமாறு கூறுவது சிரமமாக உள்ளது. காப்பீடு அட்டை இல்லாததால் வெளியில் மருந்து மாத்திரைகள் வாங்க கூறுவதாக தெரிவிக்கின்றனர். இறந்த பின் நிவாரணமாக, 10 லட்சம் ரூபாய் அளிக்கும் தமிழக அரசு, சிகிச்சையில் உள்ளோருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
13 hour(s) ago
13 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago