மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
கள்ளக்குறிச்சி: மத்திய பா.ஜ., அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச., மாவட்ட தலைவர் திராவிடமணி தலைமை தாங்கினார். செயலாளர் பழனிமுத்து, பொருளாளர் வெங்கடேசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும்.விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். மத்திய நிதி அமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சண்முகம், திருமலை, விஜயகுமார், காசிநாதன், முருகன், ரவிக்குமார், வளர்மதி, கோவிந்தராஜ், கல்யாணசுந்தரம், வேலாயுதம், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025