உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி புதுார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து,54; கூலி தொழிலாளி. இவர் கடந்த 6ம் தேதி இரவு 8:30 மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உட்கார்த்து கொண்டிருந்தார்.அப்போது கரடிசித்துார் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் அய்யப்பன்,30; என்பவர் தனக்கு தெரிந்தவரிடம் பேச வேண்டும் என்று மொபைல் போன் கேட்டார். அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த அய்யப்பன், அவரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அய்யப்பன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை