உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி அன்னபூர்ணா தினம்

திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி அன்னபூர்ணா தினம்

திருக்கோவிலூர்: அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக அன்னபூரணா தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில், ஐந்து முனை சந்திப்பில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி கிளப் சாசன தலைவர் வாசன், கிளப் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் கோதம்சந்த் அன்னதானத்தை துவக்கி வைத்தார். வள்ளலார் மன்ற நிர்வாகி சீனிவாசன் உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளை செய்திருந்தார். சங்க உறுப்பினர்கள் மகாவீர், காமராஜ், சந்திரசேகரன், சிதம்பரநாதன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ