உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லுார்துசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் பிரபாகரன், தேர்தல் தாசில்தார் சதீஷ், மண்டல துணை தாசில்தார் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தேர்தலின் போது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய உபகரண பொருட்கள், படிவங்களை நிரப்பும் விதம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.கூட்டத்தில், 1,700க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தை கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை