உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய பலி 57ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி 57ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று இருவர் பலியான நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 57ஆக உயர்ந்தது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதியில் கடந்த 18 மற்றும் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 220 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர்களில் நேற்று முன்தினம் வரையில், 55 பேர் உயிரிழந்தனர்.சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன், 46; சேஷசமுத்திரம் சாமுண்டி, 70; நேற்று இறந்தனர். அதையடுத்து, பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் 111 பேர், புதுச்சேரியில் 12 பேர், சேலத்தில் 30 பேர், விழுப்புரத்தில் 4 பேர் என மொத்தம் 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ