உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய பலி 68 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி 68 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி நேற்று இறந்தார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 229 பேருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 67 பேர் பலியாகினர். கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த கருணாபுரத்தை சேர்ந்த மூட்டை துாக்கும் கூலி தொழிலாளி மோகன்,59; சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்