மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
5 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
5 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
கள்ளக்குறிச்சி: ரோடுமாமந்துார் - சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சாலையில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள் தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லுாரி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களில் சென்று ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு செல்கின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். அதேபோல், மருத்துவமனை வழியாக சுற்று வட்டார கிராம மக்களும் அதிகளவிலும் செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் கும்மிருட்டாக காணப்படுகிறது. சாலையின் இருபுறமும் வயல்வெளி பகுதி என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இரவு நேரங்களில் சாலையை கடக்கிறது.தற்போது வாகன போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, ரோடுமாமந்துார் - சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சாலையில் மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago