உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் வேலு பேட்டி

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் வேலு பேட்டி

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் வேலு, சுப்ரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.அப்போது அமைச்சர் வேலு கூறியதாவது; கள்ளசாராயம் குடித்து சாராயம் குடித்து பாதித்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தது தெரியவந்துள்ளது. சாராயம் விற்பனை செய்த கருணாபுரம் சேர்ந்த கண்ணுக்குடி, அவரது சகோதரர் தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து யாரேனும் சாராயம் வாங்கி விற்பனை செய்துள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காவல் துறையினர் மெத்தன போக்கால், எஸ்.பி., உட்பட தொடர்புடைய காவல் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாராயம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். முதல்வரிடம் தெரிவித்து நிவாரண நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், எம்.பி.,மலையரசன், கலெக்டர் ஷ்ரவன்குமார், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 14:36

தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்வது சாதாரணமான விளையாட்டல்ல. மற்றவர்களுக்கு தண்டனை தரும் தகுதி உங்களுக்கேது?


Ramanujam Veraswamy
ஜூன் 20, 2024 11:16

தி கலெக்டர் தாஸ்


Tc Raman
ஜூன் 20, 2024 11:08

நடிகன்டா


vijay
ஜூன் 20, 2024 11:00

தண்டிக்கப்படவேண்டியது வாயாலே பற்பல வடைகள் சுட்டுவரும் பொய்யால் கட்டமைக்கப்பட்ட திராவிட மாடல்தான். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் செய்த மாபெரும் தவறு திராவிட மாடலுக்கு ஒட்டு போட்டதுதான். திராவிட மாடலின் ஓனர் கட்சி தனித்து நின்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற முடியாது என்பது தெரிந்துதான் எப்போதும் கூட்டணியுடன் போட்டியிடுகிறார்கள். வோட்டு பிரிதல் அவர்களுக்கு பலம், சிறுபான்மை வோட்டு வங்கி பெரும்பலம். பெரும்பான்மை மக்களின் ஓட்டுக்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல தைரியம், திராணி, தில்லு இல்லாத கட்சி ஒன்னு இ - லோகத்தில் உண்டெங்கில் அது திராவிட மாடல் கட்சி மட்டும்தான். லஞ்சம், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, கமிஷன், ஊழல், போதை, விமர்சிப்பவர்களை மிரட்டுதல், தாக்குதல், போலி வழக்குகள் மூலம் பயமுறுத்தல். வடமாநில மக்களை பான்பீடா வாயன், பானிபூரிகாரன் என்று கேவலமா பேசிட்டு தேர்தலில் ஹிந்தில போஸ்டர் அடிச்சு வோட்டு கேப்பான், ஏன், அரைகுறை ஹிந்தில சௌகார்பேட்டைல வோட்டு கேப்பான் திராவிட கும்பல்காரன். ஹிந்திக்காரனை, அதுவும் மேல்ஜாதிக்காரனை திராவிட மாடல் அரசு அமைக்க கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து ஆலோசகராக வச்சுக்குவாங்க. தமிழ்நாட்டுல திராவிட மாடல் அரசு மட்டும்தான், அதாவது நோ ஹிந்திக்காரன் கொடிகட்டி பறக்கமுடியாது. ஆனால், தமிழன் மட்டும்தான் எல்லா மாநிலத்துக்கும் போய் ஆளவேண்டுமாம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 20, 2024 10:49

கிழிப்பீங்க ... போங்க நீங்களும் உங்க அரசாங்கமும்.


Sesh
ஜூன் 20, 2024 10:26

இந்த வருடந்தின் சிறந்த நகைச்சுவை. மது விலக்கு மந்திரிக்கு சிறப்பு விருது தரலாம். தோராயமாக ரூ 34000000, டாஸ்மாக் இன் தொடர் வாடிக்கையாளர்களுக்கு உறுதி .


A.C.VALLIAPPAN
ஜூன் 20, 2024 10:07

ப்ளீஸ் கிவ் 2000.00 பிரியாணி பாட்டில் அண்ட் எங்கள் வோட்டை unngalukku


TCT
ஜூன் 20, 2024 09:48

Super. Where is the Minister? Why you are ing your mouth Velu?


Sesh
ஜூன் 20, 2024 10:28

due to sad news, dept ministers drink too much good quality and got flat, cannot walk now due to drowsiness.


r ravichandran
ஜூன் 20, 2024 09:22

60 ஆண்டு கால கழக மாடல் அரசுகளின் சாதனை. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.


A Venkatachalam
ஜூன் 20, 2024 09:10

சாராய கடையை மூடுங்க. உங்கள யாரு இலவசம் கேட்டாங்க. நீங்க பொழப்பு நடத்த அடுத்தவன் வீட்டுல மண்ண போடாதீங்க. ஆளுக்கொரு சாராய கடை மருத்துவ கல்லூரி மாலு. கொடுமை. ஊருக்கு 10 சந்து கடை இருக்கு.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ