உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிேஷகம்

 சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிேஷகம்

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிேஷகம் நடந்தது. முன்னதாக காலையில் வேள்வி பூஜை மற்றும் யாகம் வளர்க்கப்பட்டு, மூலவருக்கு 108 வலம்புரி சங்காபிேஷகம் நடந்தது. பின்னர் மூலவருக்கு அண்ணாமலையார் அலங்காரம் செய்து வைத்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை நந்தீஸ்வரருக்கு பிரதோஷ விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல் சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலும் சோமவாரத்தை முன்னிட்டு மூலவருக்கு 16 வகையான அபிேஷகம் மற்றும் மூலவர், காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம் செய்து வைத்து மகாதீபாரதனை நடந்தது. மேலும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சின்னசேலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்