உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் இரண்டு நாட்களில் ரூ.1.16 கோடி வர்த்தகம்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் இரண்டு நாட்களில் ரூ.1.16 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டி அரகண்டநல்லுார், தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள விவசாய பகுதி என்பதால் எப்பொழுதும் முப்போக சாகுபடி நடைபெறும். இதன் காரணமாக நெல் மற்றும் பயறு வகை பயிர்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.தற்பொழுது நெல் அறுவடை துவங்கி இருக்கும் சூழலில், மானாவாரியில் பயிர் செய்யப்பட்ட உளுந்து அறுவடையும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் தினசரி நெல் வரத்து 2,000 மூட்டையும், உளுந்து வரத்து 100 மூட்டை என மொத்தம் 448.46 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் ரூ.1.16 கோடிக்கு வர்த்தகமானது.நெல், உளுந்து அறுவடை தற்போது தான் துவங்கியிருக்கும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தீவிரமடைய கூடும் என்பதால், வரும் நாட்களில் கமிட்டிக்கான விளை பொருட்களின் வரத்து பன்மடங்கு அதிகரிக்கும் என வியாபாரிகள் கணிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை