உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் ரூ.1.21 கோடியில் பூங்கா, படகு குழாம் திறப்பு விழா

கள்ளக்குறிச்சியில் ரூ.1.21 கோடியில் பூங்கா, படகு குழாம் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: ஏமப்பேரில் 1.21 கோடி ரூபாய் மதிப்பில் நகராட்சி பூங்கா மற்றும் புனரமைக்கப்பட்ட படகு குழாம் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சி பூங்கா மற்றும் குளம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் குளத்தினை சுற்றிலும் நடைபாதை, சிறுவர் பூங்கா, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், பசுமைப் பூங்கா, செயற்கை நீருற்று, நடைபாதை, படகு குழாம் உள்ளிட்டவை அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நகராட்சி பூங்கா மற்றும் படகு குழாம் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் சுப்ராயலு, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினர் வசந்தம் கார்த்தி கேயன் எம்.எல்.ஏ., நகராட்சி பூங்காவை திறந்து வைத்தார்.நகர மன்ற துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல் ரசாக், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன், தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகராட்சி பொறியாளர் பழனி, துப்புரவு அலுவலர் ரவீந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் அமலின் சுகுணா, கவுன்சிலர்கள் ரமேஷ், அஸ்வின்குமார், யுவராணி, சீனிவாசன், மீனாட்சி, விமலா, பால்ராஜ், பாத்திமாபீ, சத்யா, செல்வம், விஜயகுமாரி, தேவராஜ், விமலா, ஞானவேல், சங்கீதா, உமா, சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.மேலும், படகு குழாமில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 94 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவர் நீச்சல் குளம், முன்பக்க நுழைவு வாயில், கலையரங்கம், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்