வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி பாடலின் பெருமை குறித்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் மலையம்மாள், மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் அசோக் குமார், மாவட்ட தலைவர்கள் வர்த்தக பிரிவு துரை, தொழிற் பிரிவு கண்ணன், ஆன்மிகப் பிரிவு தர்மசிங், நெசவாளர் பிரிவு அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் சத்யா நன்றி கூறினார். முன்னதாக பா.ஜ., மாவட்ட மகளிரணி சார்பில் கோயம்புத்துாரில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மகளிரணி தலைவி மாலினி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.