உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் பிராந்தி விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலுாரில் பிராந்தி விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கனகனந்தல் காளி கோவில் அருகே மது பாட்டில் விற்ற டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த சுதாகர் மகன் ஹரி விக்னேஷ், 20; என்பவரை கைது செய்து, 13 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல் டாஸ்மாக் கடை பின்புறத்தில் பிராந்தி பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த குடமுருட்டியைச் சேர்ந்த ஏழுமலை, 50; என்பவரை கைது செய்து, 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி