உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாரில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியுடன் 2 பேர் கைது சின்னசேலத்தில் பரபரப்பு

பாரில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியுடன் 2 பேர் கைது சின்னசேலத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி, : சின்னசேலத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் தாக்கி, துப்பாக்கியால் சுட முயன்ற வழக்கில், 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, 2 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மோகன்ராஜ், 38; இவர், கடந்த 3ம் தேதி மாலை 5:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு சொந்தமான பாரில் மது அருந்தினார்.அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சின்னசேலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் கலைமாறன் தரப்பினர் மோகன்ராஜிடம் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.காயமடைந்த மோகன்ராஜ் தப்பியோட முயன்றபோது, கலைமாறன் தரப் பினர் அவரை பிடித்துக் கொள்ள, கலைமாறன் உடன் வந்த ராஜேஷ் சிறிய ரக கை துப்பாக்கியால் மோகன்ராஜை சுட முயன்றார்.உடன் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் கலைமாறன் தரப்பினரை தாக்க முயன்றதால் அந்த கும்பல் காரில் தப்பியது. காயமடைந்த மோகன்ராஜ் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், கலைமாறன் தரப்பினர் அதே லாட்ஜில் தங்கியிருந்தது தெரிந்தது.அதனைத் தொடர்ந்து, கோபாலகிருஷ்ணன் மகன் கலைமாறன், 27; அரக்கோ ணம் முரளி மகன் யுகேந்திரன்,18; ஆகிய இரண்டு பேரையும் பிடித்து துப்பாக்கி மற்றும் கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.அதில், அவர்களுடன் வந்தவர்கள் சென்னை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜேஷ், ஊரப்பாக்கம் புவனேஷ் கிருஷ்ணன், நந்தா மற்றும் லெமன் என தெரியவந்தது.கலைமாறன், யுகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து, தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.சென்னையைச் சேர்ந்த நபர்கள் கத்தி, துப்பாக்கியுடன் சின்னசேலம் பகுதியில் தங்கியதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி