உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு 4 பேர் கைது

முன்விரோத தகராறு 4 பேர் கைது

ரிஷிவந்தியம் : பாசாரில் முன்விரோதம் தொடர்பாக இரு குடும்பத்தினர் தாக்கிக் கொண்டதில் 11 பேர் மீது வழக்குப் பதிந்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 65; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 55; இருவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், கடந்த 14ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், ஜெய்சங்கர், ராஜாங்கம் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிந்து, அருள்பாண்டி, 24; அன்பு, 23; ஆறுமுகம், 28; தாமோதரன், 34; ஆகிய 4 பேரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ