உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 49 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 49 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கோரிக்கை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் 49 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி 1 மற்றும் 2 கிளையில் இருந்து 102 பஸ், சின்னசேலம்-32, உளுந்துார்பேட்டை-53, திருக்கோவிலுார்-55, சங்கராபுரம்-38 என மாவட்டம் முழுவதும் 280 அரசு பஸ்கள் வெளிமாவட்டம் மற்றும் கிராம பகுதிகளுக்கு தினமும் இயக்கப்படுகிறது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், பா.ஜ., தே.மு.தி.க., உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.இதில், சி.ஐ.டி.யூ., மண்டல துணைபொதுச்செயலாளர் தெய்வீகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி பணிமனையில் இருந்து ஊர்வலமாக சென்று நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். தொழிற்சங்க நிர்வாகிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் தற்காலிக டிரைவர், கண்டெக்டர்கள் மூலம் அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.

100 சதவீத பஸ்கள்இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பயணிகள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி அனைத்து வழித்தடத்திலும் அரசு பஸ் இயக்குவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி கிளை-1 மற்றும் 2ல் இருந்து 71 வழித்தடங்கள், திருக்கோவிலுார்-51, உளுந்துார்பேட்டை-43, சங்கராபுரம்-35, சின்னசேலம்-25 என மாவட்டம் முழுவதும் 6 கிளை பணிமணிகளில் இருந்து 225 வழித்தடங்களில் அரசு பஸ்கள் நேற்று காலையில் இருந்து இயக்கப்பட்டது. 100 சதவீதம் முழுமையாக அரசு பஸ்கள் நேற்று இயக்கப்படுகிறது என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை