உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் ஸ்ரீபதி, 20; சடையம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் கல்லுாரி முடிந்து தனது நண்பருடன் ஸ்ரீபதி வெளியே வந்துள்ளார். அப்போது வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகன் அய்யனார், 20; ஸ்ரீபதியுடன் தகராறு செய்து தாக்கினார். இது குறித்த புகாரின்பேரில், அய்யனார் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை