உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகத்தில் சிதையும் வரலாற்று நினைவு சின்னம்

தியாகதுருகத்தில் சிதையும் வரலாற்று நினைவு சின்னம்

தி யாகதுருகம் நகரின் மையப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க மலை மீது திப்பு சுல்தான் காலத்திய கோட்டை மற்றும் 3 பிரம்மாண்ட பீரங்கிகள் உள்ளன. இது கடந்த 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட போரில் கோட்டை மற்றும் பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டது. சேதம் அடைந்த கோட்டை சுவர் மற்றும் மலை மீது உள்ள பீரங்கிகள் பாதுகாப்பு கொட்டடிகள் இன்னும் வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது. இவை, தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலையின் வடக்கு பகுதியில் இதன் மீது ஏறுவதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிவாரத்தை ஒட்டி கோட்டை குளமும் அதன் அருகே கோட்டை நிர்வாகத்தை கவனிக்க 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட அலுவலக கட்டடம் உள்ளது. இந்த கட்டடங்கள் அக்கால முறைப்படி சுண்ணாம்பு கலவை, செங்கல் மற்றும் உறுதியான மரங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே குதிரை லாயமும் உள்ளது. பல ஆண்டு கால பழமையை எடுத்துக் கூறும் வகையில் உள்ள நிர்வாக அலுவலக கட்டடம் பராமரிப்பின்றி முள்செடி, கொடிகள் படர்ந்து சேதம் அடைந்து வருகிறது. கடந்த காலத்தில் சிறப்புற்று விளங்கிய இக்கட்டடம், இன்று கால வெள்ளத்தில் மெல்ல சிதைந்து தனது கம்பீரத்தை இழந்து வருகிறது. தியாகதுருகம் நகருக்கு அடையாளமாக உள்ள இக்கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இக்கட்டடத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை