உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விருத்தாசலம், : பைக்கில் சென்ற வாலிபர், சாலை தடுப்பு கட்டையி்ல மோதி இறந்தார்.விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்,26; துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையில் பைக்கில் சென்றபோது, காணாதுகண்டான் அருகே சாலையோ தடுப்பு கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ