உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  இரு மகன்களுடன் பெண் மாயம்

 இரு மகன்களுடன் பெண் மாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இரு மகன்களுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த சுல்தான் மகன் பஷீர்அகமது,35; இவரது மனைவி பவித்ரா,27; இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 20 ம் தேதி மாலை 6 மணிக்கு பவித்ரா, தனது மகன்கள் காமில்,8; திவான்,5; ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக பஷீர்அகமது கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை