மேலும் செய்திகள்
நவராத்திரி அம்பு எய்தல் வைபவம்
03-Oct-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் விஜயதசமியையொட்டி அம்பாள் மகிஷாசூரன் மீது அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் புண்டரீகவள்ளி தாயார் நவராத்திரி உற்சவத்தையொட்டி, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். விஜயதசமி நாளில் அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்ததுபோல், நேற்று முன்தினம் மாலை பெருமாள் கோவில் முன்பு வாழை மரம் நடப்பட்டு, அதில் மகிஷாசூரனை மந்திரபூர்வமாக ஆவாஹனம் செய்தனர். கோவில் முன்பு எழுந்தருளிய அம்பாள் அதன் மீது அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேசிக பட்டர் வழிபாடுகளை செய்து வைத்தார்.
03-Oct-2025