உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வெண்கலத்தில் அம்பேத்கர் சிலை: தி.மு.க., எம்.எல்.ஏ., - வி.சி.,மனு

 வெண்கலத்தில் அம்பேத்கர் சிலை: தி.மு.க., எம்.எல்.ஏ., - வி.சி.,மனு

கள்ளக்குறிச்சி: வெண்கலத்தில் அம்பேக்தர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் வி.சி., கட்சியினர் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் நீதிமன்றத்திற்கு செல்லும் பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை வேறொரு இடத்திற்கு மாற்ற அ.தி.மு.க.,வினர் தடையாக இருப்பதாக புகார் தெரிவித்து, கள்ளக்குறிச்சி வி.சி., தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பழனியம்மாள், அறிவுக்கரசு முன்னிலை வகித்தனர். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழக்கறிஞரணி மாநில செயலாளர் பார்வேந்தன் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து, மதியம் 1:30 மணியளவில் உண்ணாவிரை போராட்டத்தை முடித்து, கலெக்டர் பிரசாந்திடம் அளித்த மனு: கடந்த 1992ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற இருப்பதால், சற்று தொலைவில் வெண்கலத்திலான அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர சேர்மன் சுப்ராயலு, ஒன்றிய துணை சேர்மன் தாமோதரன், நெடுஞ்செழியன் மற்றும் தி.மு.க., வி.சி., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி